×

கேத்ரினாவின் அண்ணனை காதலிக்கும் இலியானா

மும்பை: கேத்ரினா கைஃபின் அண்ணனை தீவிரமாக காதலித்து வருகிறார் இலியானா. தமிழில் கேடி, விஜய்யுடன் நண்பன் படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கிலும் இந்தியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் இங்கிலாந்தை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்தார். இருவரும் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இரண்டு வருடங்கள் நீடித்த இந்த காதல், திடீரென முறிந்தது. இந்நிலையில் கேத்ரினாவின் அண்ணனான செபஸ்டியன் மைக்கேல் என்பவரை இலியானா காதலித்து வருகிறார். இருவரும் மும்பையில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். லண்டனில் தொழிலதிபராக இருக்கிறாராம் செபஸ்டியன். கேத்ரினா கைஃப் கொடுத்த பார்ட்டி ஒன்றில் செபஸ்டியனை இலியானா சந்தித்துள்ளார். இருவரும் நண்பர்களாக பழகத் தொடங்கினர். பிறகு இது காதலாக மாறியுள்ளது. சமீபத்தில் கேத்ரினா, அவரது கணவர் விக்கி கவுசல் மற்றும் நண்பர்களுடன் இலியானாவும் செபஸ்டியனும் மாலத்தீவுக்கு டூர் சென்று வந்தனர். ‘என் வாழ்க்கையில் மீண்டும் காதல் வரும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் வந்திருக்கிறது. இந்த அன்பு என்னை சிறகடித்து பறக்க வைத்து வருகிறது’ என சமூக வலைத்தளத்தில் இலியானா கூறியுள்ளார்….

The post கேத்ரினாவின் அண்ணனை காதலிக்கும் இலியானா appeared first on Dinakaran.

Tags : Ileana ,Katrina ,Mumbai ,Katrina Kaif ,Vijay ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்